top of page
brown-watercolor-leaf-background-aesthetic-autumn-season.jpg

ஸ்ரீ

ன்
பி
ன்
கு
டி
ல்

மேலான மேட்டூரில், மேற்கே "ஸ்ரீ சித்தேஸ்வரன் மலைக்கும்", கிழக்கே "ஸ்ரீ காவிரி நதிக்கும்" மத்தியில், "ஸ்ரீ கண்ணனின்" கிருபையாலும், "ஸ்ரீ குருதேவரின்" ஆசியாலும்,  "மெய்யன்பர்களின் விருப்பத்தாலும்" அமையப் பெற்ற அன்பின் குடில், "ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச தேவரின்" ஒழுக்கம் நிறைந்த பக்தியும், "ஸ்ரீ ஆதிசங்கரரின்" அத்வைத வேதாந்த ஞானமும், "ஸ்ரீ மகான்களின்" அனுபவமும், "ஸ்ரீ சத்குருதேவரின்" அன்பையும், அடக்கத்தையுமே பாடமாக கொண்டுள்ளது.

 

அன்பின் குடிலில், 

"ரிபு கீதை பாராயணமே, நித்திய சாதனை" 

"ஜீவர்கள் உள்ளம் உருகி விடும் கண்ணீரே, காணிக்கை" 

ஓர் "அன்பான தந்தையாய்", தம் மெய்யன்பர்களான குழந்தைகளுக்கு,  "ஸ்வயஞானானுபவத்தை" அவர்கள் அறியாவண்ணம் அனுபவம் செய்வித்தும், எண்ணற்ற "ஞானிகள்", "சித்தர்கள்", "தேவர்கள்" மற்றும் "அன்பர்கள்" ஆகியோருடன் சத்சங்கங்கள் செய்தும், அனேகர் ஜீவன் முக்தி பெற இயைந்த முக்தி ஸ்தலம் "அன்பின் குடில்".

         

இங்கு, வேத, சாஸ்திர, உபநிஷத பாடங்களோ, புராண, இதிகாச கதைகளோ, மந்திர, தந்திர, யந்திர பூஜை, புனஸ்காரங்களோ, இல்லவே இல்லை, குருவோ, சிஷ்யனோ, நிர்வாகிகளோ இல்லை, சீரமைப்பு பணிகளோ, அபிவிருத்திப் பணிகளோ கிடையாது. உலகாயத பேச்சுக்கள் அறவே அற்ற, வியாபார, விளம்பர, ஆடம்பர நடவடிக்கைகள் எதுவும் இல்லாத, "அன்பான அன்பர்களின் சாதனை கூடமாகும்". 

         

அன்பர்கள், இங்கு தங்கி நான்கு நாட்கள் பாராயணம் செய்ய ஸ்ரீ குருதேவர் அனுமதி அளித்துள்ளார். "ஸ்ரீகுரு பூர்ணிமா", ஸ்ரீகுருதேவர் ஜெயந்தி", "ஸ்ரீகுரு பூஜை" மற்றும் "ஸ்ரீ அகண்ட பாராயணம்" ஆகியவை விழாக்களாக, அன்பர்களால் கொண்டாடப்படுகிறது. 

அன்பின் குடில் ஒர், 

"சுதந்தர பறவைகளின் கூடு" 

"ஞான வேட்கை கொண்டோரின் சரணாலயம்" 

"மெய்ஞான அன்பர்களின் புகலிடம்" 

"அன்பான குழந்தைகளின் ஆலயம்" 

"அன்பர்களாகிய முத்துக்களை ஒருங்கிணைத்த முத்துச்சரம்"

bottom of page