top of page
brown-watercolor-leaf-background-aesthetic-autumn-season.jpg
GOLD ART WITH FRAME.png

பூ
ஜ்

ஸ்ரீ

த்
கு
ரு
தூ
ளி
பா
பா

1bb13f4acb5b69fb41bc5974c6dc8248_edited.jpg

முத்துக்குளிக்கும் ஊராகிய தூத்துக்குடியில், திருமந்திர நகரில், அன்னையின் தவத்தாலும், குறைந்த ஆயுளுடனே மகன் பிறப்பான் என்ற தந்தையின் வரத்தாலும், ப்ரம்மஸ்ரீ வடிவேல் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ லட்சுமி அம்மாள் அவர்களின் தவப்புதல்வனாக, சித்திரை திங்கள், 16 ஆம் நாள், (28, ஏப்ரல்) 1930  அன்று பிறந்த அக்குழந்தைக்கு கருப்பசாமி என நாமகரணம் சூட்டி நிறைந்த ஒழுக்கத்துடன் வளர்த்து வந்தனர்.

படிப்பில் கவனம் அற்றுப் போனாலும் எட்டு வயது முதலே, கதா சிரவணம், நாம சங்கீர்த்தனம், தேவாரம் மற்றும் திருவாசகம் முதலியவைகளை கற்றும், நாம சங்கீர்த்தனத்தில் லயித்தும், தெய்வீக காட்சியில் திளைத்தும், பிரக்ஞை அற்றுப் போவர். தனது பத்தாம் வயது முதல், தந்தையே குருவாகி அனுபவ ஞானப்பாடம் கற்பித்தார். இல்லறத்தில் நாட்டம் இல்லாவிட்டாலும் தாயாரின் மரணத்திற்கு பின் தந்தை சொல் ஏற்று ஸ்ரீ ஸ்வர்ணாம்பாள் என்ற கன்னிகையை மணமுடித்து இல்லற தர்மம் ஏற்றார். 

சுமார் பதினெட்டு ஆண்டுகள் தொழிலதிபராய், நாம சங்கீர்த்தனனத்துடன், ஸ்ரீ கண்ணனின் துணைகொண்டு தொழில் சேவையும் முடித்தார். குருதேவரின் வரத்திற்கேற்ப தனது முப்பத்தாறாம் வயதில் மரணானுபவம் ஏற்பட, ஸ்ரீகுருதேவரின் அனுக்ரஹத்தால் மரணத்திற்கு மரணத்தை கொடுத்து காலபயம் வென்றார். 

அவருடைய தவப்பயனால், தேன் இருக்கும் இடம் நோக்கி வண்டுகள் வருவது போல, 1965 முதல் சிஷ்யர்கள் அவரை நோக்கி வரத் தொடங்கினர். அவருடைய எல்லையில்லா பக்திக்கு இணங்கி 1970 ல் பகவான் ஸ்ரீ பாண்டுரங்கனே அவருடன் ஒரு வருட காலம் பாரத தேசம் மற்றும் வெள்ளியங்கிரி யாத்திரை மேற்கொண்டார். அதன்பின் முறையே சர்வாங்க சேவையும், சத்குரு சேவையும் சிரத்தையுடன் ஏற்று செவ்வனே செய்து வந்தார்.

           

அவனருளால் 1996-ஆம் ஆண்டு ஞானப்பெருமலையாம் திருஅண்ணாமலையில், "அண்ணாமலை ரமண குடீரம்" அமைய, பிரம்மச்சாரிகளும் பன்னாட்டு சிஷ்யர்களும் அவரிடம் ரிபு கீதை பாடம் ஏற்றனர். அதன்பின் அன்பர்கள் விருப்பத்தால் மேலான மேட்டூரில் ஸ்ரீ காவேரி அன்னையின் கரையில் குடில் அமையப்பெற்றது. ஞான வேட்கையுற்ற பல சீடர்கள் உலகெங்கிலும்  இருந்து வந்து அவரிடம் பாடம் ஏற்று ஜீவன் முக்தி உற்றனர்.

முமுக்ஷுக்கள் உய்ய தேசமெங்கும் இடையறாது பயணித்து அருள்புரிந்தார். சரணடைந்த அன்பர்களை கரையேற்ற எண்ணற்ற நூல்களை மிகவும் எளிய முறையில் இயற்றியும், அன்பர்களின் சாதனை மேம்பட தனித்துவமான கடிதங்கள் எழுதியும், சத்சங்கங்கள் மூலம் தெளிவான விளக்கங்கள் கொடுத்தும் தன் சீடர்களை தனது கருணையினால் ஆட்கொண்டு அருளினார். தாம் வந்த நோக்கம் நிறைவேறியவுடன் தை ஆறாம் நாள் 2016-ஆம் ஆண்டு மகா சமாதி அடைந்தார்.

        "பணிவு", "பக்தி", "ஞானம்", "அன்பு", "அடக்கம்", "கருணை"மற்றும் "தயை" இவற்றையே சாதனையாகக் கொண்டு

"ரிபு கீதையையே, ஸ்வய ஞானானுபவமாக" கைவரப்பெற்று,

"யாதும் அறியா பாலகனாய்", "ஞானப் பைத்தியமாகி",

"சுத்த பரதேசியாய்" சஞ்சரித்த" கருணையே வடிவான",

"ஞானமும்", "பக்தியும்" ஒருசேரப் பெற்ற

"அன்பான", "அமைதியான", "புன்னகை மாறாத"

மகாஞானி  "ஸ்ரீ சத்குரு தூளி பாபா" அவர்கள். 

bottom of page